பெரியநாயகி அம்மன் கோவில் | Periyanayaki Amman Temple

Priya nayagi amman temple | palani city | History of palani | p2pdistrict.in |

பெரியநாயகி அம்மன் கோவில்:

   பழனி நகரக் கோவிலாக அழைக்கப்படும் மற்றொரு முக்கியமான கோவில், தாயார் பெரியநாயகி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கோவில் அளவில் பெரியதாகவும், தென்னிந்தியக் கட்டிடக் கலையில் கட்டப்பட்டதாகவும் உள்ளது. இதில் பெரியநாயகி, முத்துக்குமாரசுவாமி,  சோமாஸ் கந்தர், கைலாசநாதர், போன்ற  தெய்வங்களுக்கு பெரிய சன்னதிகளும், துர்கை, பைரவர், சூரியன், நவகிரகங்கள், தட்சிணாமூர்த்தி, நடராஜர், விநாயகர் போன்ற  தெய்வங்களுக்கு  சிறிய சன்னதிகளும் உள்ளன.

   அம்மனின் கோவில் முருகப்பெருமானின் தெற்குப்புறமாகவும், கைலாசநாதர் கோவில் வடக்குப்புறமாகவும் அமைந்துள்ளது. நன்கு கவனித்தால் முதலில் இந்தக் கோவில் முருகருக்காகவே கட்டப்பட்டதாகவும், பின்னர் அம்மனின் சன்னதி மற்றும் கைலாசநாதர் சன்னதி சேர்க்கப்பட்டதாகவும் புரிகிறது.

   மேலும், கொடிமரம் மற்றும் மயில் வாகனம் முருக சன்னதியின் முன்னிலையில் உள்ளன. இந்த வகையான அமைப்பைத் தான் முருகன் நடுவில் அமர்ந்து இரு பக்கங்களில் பெற்றோர் இருப்பது – சோமாஸ்கந்த மூர்த்தி அமைப்பு என அழைக்கப்படுகிறது.

Leave a Reply